அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
"எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதனமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாவதாக ஆமின்"........!!
பரிசுத்தத் தாய்ப்பால்
போல்.............!
பசிதீர்க்கும் ஜம்ஜம்நீர்!
பசிக்கின்ற குழந்தைக்குப்
பரிசுத்தத் தாய்ப்பாலை
பரிவோடு வழங்குகின்ற
பண்புநிறைப் பரம்பொருளே..........!
வசிக்கின்ற இடத்தினிலே
புசிப்பதற்குப் பாலின்றி
கசிந்துள்ளம் உருகினின்ற
ஹாஜிராவின் குழந்தைக்கு
"குன்" என்ற
சொல்லாலே
குளிரான நீருற்றை
குன்றாக்கிக் கொடுத்தவனே
குறைதீர்க்கும் இறையோனே................
நோயகற்றும் "ஜம்ஜம்"மை
சேயருந்தக் கொடுத்தபின்பு
தாய்புகழ்ந்து சொன்னாரே
வாய்நிரம்பி அல்ஹம்துல்லாஹ்.................!!
தொகுத்தவர்...
Friday, October 26, 2012
Tuesday, December 13, 2011
இஸ்ரேலிய உருவாக்கம் - ஒரு ஆய்வு பார்வை.....!
Posted by
Haja
at
12:17 AM

அவர்கள் சந்தித்தனர். அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடுப்பவர்கள், ஆம். அவர்கள் யூதர்கள். அவர்களுடைய இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை. இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. உலக வரைபடத்தில் முகவரி இல்லை. அவர்கள் தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக் கொள்வது என்று அந்த சூதாட்ட விடுதியில் முடிவு கண்டனர். அவர்களின் தலைவன் தியோடர்ஹெட்நெல் என்பவன்.அவர்கள் ‘யூததேசிய நிதி’ என்று வலிமை மிக்க ஓர் பெட்டகத்தைத் திறந்தனர். அங்கே கூடியவர்களே ஆளுக்குப் பல்லாயிரம் கோடி டாலர் என்று நிதி அளித்தனர். இது ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே...
Thursday, September 22, 2011
"துஆக்களின் தொகுப்பு இரண்டாம் பாகம்"
Posted by
Haja
at
7:57 AM

بِسْمِ اللَّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌஇது ஓடுவதும் நிற்பதும் அல்லாஹ்வின் பெயராலேயே (நிகழ்கின்றன). நிச்சயமாக என் இறைவன் மன்னிப்பவனாகவும் கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். 11:41 رَبِّ إِنِّي أَعُوذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِي بِهِ عِلْمٌ وَإِلَّا تَغْفِرْ لِي وَتَرْحَمْنِي أَكُن مِّنَ الْخَاسِرِينَ“என் இறைவா! எனக்கு எதை பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்ட மடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்”. 11:47 فَاطِرَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ أَنتَ وَلِيِّي فِي الدُّنْيَا وَالْآخِرَةِ تَوَفَّنِي مُسْلِمًا وَأَلْحِقْنِي...
Subscribe to:
Posts (Atom)