அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
"எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும், சமாதனமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாவதாக ஆமின்"........!!
பரிசுத்தத் தாய்ப்பால்
போல்.............!
பசிதீர்க்கும் ஜம்ஜம்நீர்!
பசிக்கின்ற குழந்தைக்குப்
பரிசுத்தத் தாய்ப்பாலை
பரிவோடு வழங்குகின்ற
பண்புநிறைப் பரம்பொருளே..........!
வசிக்கின்ற இடத்தினிலே
புசிப்பதற்குப் பாலின்றி
கசிந்துள்ளம் உருகினின்ற
ஹாஜிராவின் குழந்தைக்கு
"குன்" என்ற
சொல்லாலே
குளிரான நீருற்றை
குன்றாக்கிக் கொடுத்தவனே
குறைதீர்க்கும் இறையோனே................
நோயகற்றும் "ஜம்ஜம்"மை
சேயருந்தக் கொடுத்தபின்பு
தாய்புகழ்ந்து சொன்னாரே
வாய்நிரம்பி அல்ஹம்துல்லாஹ்.................!!
தொகுத்தவர்...