குர்ஆன் & நபிமொழி

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)
Saturday, July 17, 2010

ஐந்து கலிமாக்கள்

இறைவன் வகுத்த ஐந்து கடமைகள் பின்வருமாறு:

1.கலிமா
2.தொழுகை
3.நோன்பு
4.ஜக்காத்
5.ஹஜ் - இதில் முதல் கடமையை தெரிந்துக் கொள்வோம் வாரீர்.


ஐந்து கலிமாக்கள்

1. கலிமா தய்யிப்

லா இலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி

பொருள்: முதல் கலிமா பரிசுத்தமானது

வணக்கத்திற்குரியவன் அல்லாஹூத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் திருத்தூதராக இருக்கிறார்கள்.

2. கலிமா ஷஹாதத்

அஷ்ஹது அல்லா இலாஹா இல்லல்லாஹு வஹ்த்ஹு லாஷரீக்க லஹு வஆஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு.

பொருள்: இரண்டாம் கலிமா (உள்ளத்தால்) சாட்சி கூரல்

வணக்கத்திற்குரியவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு எந்த இறைவனுமில்லை என்று (உள்ளத்தால் உறுதி கொண்டு) சாட்சிக் கூறுகிறேன். அவன் தனித்தவன் அவனுக்கு (யாரும்) இணை இல்லை. மேலும் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் அடியாராகவும், உண்மைத் திருத்தூதராகவும் இருக்கிறார்கள் என்றும் சாட்சிக் கூறுகிறேன்.

3. கலிமா தம்ஜீது

சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலாஹௌல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

பொருள்: மூன்றாம் கலிமா தூய்மைப்படுத்துதல்

அல்லாஹ் பரிசுத்தமானவன். மேலும் எல்லாப் புகழும் அல்லாஹுத்தஆலாவிற்கே உரியன. வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. மேலும் அல்லாஹுத்தஆலா மிகப் பெரியவன், பாவத்தை விட்டும் தவிழ்த்துக் கொள்ள சக்தியும், நற்காரியங்கள் புரிவதற்குரிய திறனும் அல்லாஹ்வின் உதவிக் கொண்டே ஒழிய இல்லை. அவன் மிக உயர்ந்தோணும் கண்ணிய மிக்கோனுமாக இருக்கிறான்.

4. கலிமா தவ்ஹீது

லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக் கலஹு லஹுல்முல்கு வலஹுல் ஹம்து யுஹ்யீ வயுமீத்து வஹுவ ஹய்யுல் லாயெமூத்து பியதிஹில் கைரு வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர்.

பொருள்: நான்காம் கலிமா ஒருமைப்படுத்துதல்

வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹுவைத் தவிர வேறு இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு இணையும் இல்லை. எல்லா அரசாட்சிகளும் அவனுக்கே உரியன, புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன. அவனே படைப்பினங்களை உயிர்ப்பிக்கவும், மர்ணிக்கவும் செய்கிறான். அவன் என்றும் நிலைத்திருப்பவன். நலமனைத்தும் அவன் கைவசமே உள்ளன. அவன் எல்லாப் பொருள்களின் மீதும் சக்தி வாய்ந்தவன்.

5. கலிமா ரத்துல் குஃப்ர்

அல்லாஹும்ம இன்னி அஊதுபிக்க மின் அன்உஷ்ரிக்க பிக்க ஷைஅவ் வஅன அஃலமு பிஹி வஸ்தக்ஃபிருக்க லிமா லாஅஃலமு பிஹி துப்த்து அன்ஹு வதபர்ரத்து மினல்லகுஃப்ரி வஷிர்க்கி வல்மஆசி குல்லிஹா வஅஸ்லம்து வஆமன்து வஅகூலு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலுல்லாஹி.

பொருள்: ஐந்தாம் கலிமா இறைமறுப்பை நீக்குதல்

யா அல்லாஹ் நான் அறிந்தவனாக இருக்கும் நிலையில் உன்னைக் கொண்டு எந்த வஸ்துவையும் (இணை வைப்பதை) விட்டும் உன்னிடம் பாதுகாப்பு கோறுகிறேன். நான் அறியாமல் எக்குற்றம் என்னில் நிகழ்ந்ததோ, அதற்காக உன்னிடம் பாவமன்னிப்புத் தேடுகிறேன். அக்குற்றத்தை விட்டும் நான் தவ்பா செய்து (இனி ஒரு போதும் அதை செய்வதில்லை என்ற உறுதியுடன்) மீன்டேன்.

மேலும் இறை மறுப்பு இணை வைத்தல் இன்னும் எத்தனை வகை (மாறுபாடான) பாவ செயல்கள் இருக்கின்றனவோ அவைகளை விட்டும் நீங்கி விட்டேன். நான் இஸ்லாமானேன், ஈமான் கொண்டேன், வணக்கத்திற்குரியவன் இறைவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுத்தஆலாவின் திருத்தூதராக இருக்கிறார்கள் என்றும் நம்பிக்கைக் கொள்கிறேன்.

குறிப்பு: நாம் மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து கலிமாக்களையும் தினமும் அதிகமாக ஓதிவருவதால், உள்ளத்தில் பேரோளி ஜொலிக்கும் அல்லாஹ்வின் அச்சமும் உறுதியும் நிலைக்கும்.
Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email:

13 comments:

Anonymous said... at September 30, 2014 at 12:14 AM

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ..
நீங்கள் கூறியுருக்கும் ஐந்து கலிமாக்களை தொடராக..
அதாவது இது ஒன்றாவது கலிமா,இது இரண்டாவது கலிமா...........
என கூறி இருக்கின்றார்களா..
குர் ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரத்துடன் கூறவும்!!!!!!!?????????????

Unknown said... at November 21, 2017 at 1:25 PM

ஆதாரமற்ற கலிமா பதிவு

அல்லாஹ்வின் அடிமை said... at August 30, 2018 at 8:09 AM

நல்ல பதிவு

இந்த கலிமாக்களை கூறினால் தான் முஸ்லிம் என்று கூறவில்லை

ஆரம்ப காலத்தில் பிள்ளைகளின் திரனையும் தக்வாவையும் மேம்படுத்த உருவாக்கப்பட்டது தான்

மற்றபடி இந்த வாசகத்தின் அர்தத்தஅர்த் பிழை ஏதும் இல்லையே

Unknown said... at December 30, 2018 at 5:55 AM

அப்போது கலிமா என்பது பொய்யா

Unknown said... at June 9, 2020 at 11:59 AM

இந்த ஐந்து கலிமாவும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் இருந்து எடுக்கப்பட்டவை ஐந்து என்ற என்னிக்கை வேன்டுமானால் ஹதீஸ்களில் இல்லை என்று சொல்லலாம் ஆனால் ஐந்து கலிமாக்களின் கட்டமைப்பு குர்ஆன் மற்றும் ஹதீஸின் அடிபடையில் தொகுக்கபட்டவை...

இந்த ஐந்து கலிமாக்களின் சிறப்பை அறிந்த உலமாக்கள் எளிய மக்களும் மனனம் செய்யும் வகையில் தொகுத்து தந்துள்ளனர்...

ஐந்து கலிமாவை மறுக்கும் கூட்டம் தஜ்ஜாலின் சகோதரர்கள் இவர்கள் குர்ஆனிலே எழுத்து பிழை இலக்கன பிழை கண்டவர்கள் மேலும் கன்னியத்திற்குரிய ஆலிமகளையும் , சஹாபாக்களையும் திட்டிய கூட்டம் அவர்களை அல்லாஹ் அடையால படுத்தி கேவலப்படுத்திவிட்டான் ...

மேலும் விளக்கம் தேவை எனில் mail அனுப்பவும் ...( Explanation is only sunnath wal jamaath not for wahaabi )

Anonymous said... at March 5, 2023 at 8:07 AM

தஜ்ஜால்களுக்கு இந்த கலிமாவால் எந்த பிரயோஜனமும் இல்லை. புரியவும் செய்யாது.

Anonymous said... at April 18, 2023 at 11:33 AM

இறைவன் வகுத்த ஐந்து கடமைகள்.
1.கலிமா
2.தொழுகை
3.நோன்பு
4.ஜக்காத்
5.ஹஜ்.

Anonymous said... at May 1, 2023 at 2:32 AM

VERY USEFUL FOR ME .THANK U. JASAK ALLAH KAIRAN

Anonymous said... at December 6, 2023 at 5:34 PM

May Allah bless for all US to enter the jennah

Anonymous said... at January 16, 2024 at 10:52 AM

ஓகே

Anonymous said... at March 12, 2024 at 5:11 AM

அல்லாஹ் ஹூ அக்பர்
இறைவா !!
எங்கள் குடும்பத்திற்கு ஈமான் கொண்டவர்களாக ஆக்கியதற்கு நன்றி யா அல்லாஹ் 🤲🤲

Anonymous said... at March 12, 2024 at 5:12 AM

ALLAH Hu Akbar

Anonymous said... at March 20, 2024 at 4:53 PM

5 வது கலிமா 2 விதமான அர்த்தம் உள்ளதாக உள்ளது மக்கள் சரியான முறையில் எப்படி விளங்குவது

Post a Comment

சகோதரனைப் பற்றி

ஊக்கமளிப்பவர்கள்