குர்ஆன் & நபிமொழி

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)
Saturday, November 13, 2010

குர்ஆன் இறைவேதமா?மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)

உலகில் பல மதங்களும், பலவகையான வேதங்களும் இருக்கின்றன, ஆனால் எந்த ஒரு வேதமும் காலப் போக்கில் மாற்றங்களை சந்தித்திருக்கின்றன. ஆனால் அருள்மறையாம் திருகுர்ஆன் இறைவனால் இறக்கிய நாளில் இருந்து இன்று வரை துளி அளவு கூட மாற்றமில்லாமல், எப்படி அது அருளப்பெற்றதோ! அப்படியே இன்று வரை மட்டுமல்லாது இறுதி நாள் (கியாமத் நாள்) வரை அவை எந்த ஒரு மாறுதலுக்கும் உள்ளாகாமல் அப்படியே இருக்கும் என்பதில் துளி அளவு கூட சந்தேகமில்லை. ஏனென்றால் குர்ஆன் இறைவேதம் என்ற சிறப்பை பெற்றிருப்பதனால்.

குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்கு இறைவனே பல இடங்களில் தெளிவாக விளக்கி கூறுகிறான். குர்ஆனில் 38 அத்தியாயத்தில் 41 தடவை குர்ஆனைப் பற்றி தெளிவாக எடுத்து கூறுகிறான் இறைவன்.

மக்கள் அறிவு எழுச்சி பெறாத காலத்திலேயே பல அறிய தகவல்களை எளிய முறையிலும், புரியும் வகையிலும் 1400 வருடங்களுக்கு முன்பாகவே எடுத்துரைத்திருகின்றன என்றால், குர்ஆன் இறைவேதம் தான் என்று சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதை ஆராய்ந்து பார்த்தாலே போதுமானது அதன் உன்மை நிலை புரியும். முஸ்லீம் மற்றும் முஸ்லீம் அல்லாத நபர்கள் குர்ஆனின் உன்மை நிலையை அறிவதற்காகவே. திருமறையாம் அல்குர்ஆன் பல மொழிகளில் வெளிவந்துள்ளது அனைத்து சகோதர மக்களும், அவரவர்களுக்கு ஏற்ற மொழியில் படித்து புரிந்துக்கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளன. எந்த ஒரு வேதமும் அனைத்து மொழிகளிலும் இதுவரை வெளிவந்ததே இல்லை, ஆனால் குர்ஆன் அந்த சிறப்பையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

குர்ஆன் இறைவேதம் தான் என்பதை பல வகைகளில் தெளிவாக்களாம். அதில் கூறப்பட்டிருக்கும் செய்திகள் அனைத்தும் இறைவனின் வார்த்தைகள் அன்றி வேறில்லை. எந்த ஒரு மனிதனாலும் அதை இவ்வளவு தெளிவாகவும், அனைத்து மத மக்களுக்கும் ஏற்ற வகையிலும் நயமாக யாருடைய மனதையும் புன்படுத்தாமல் தொகுக்க முடியாது, அதை தொகுக்க உலகைப்படைத்த இறைவனால் மட்டுமே முடியும் என்பதில் ஐயமில்லை.

முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வாழ்க்கையில் 23 ஆண்டுகாலமாக குர்ஆன் சிறிது சிறிதாக இறைவனால் அவர்களுக்கு அருளப்பட்டது என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. அதுமட்டுமல்லாது இறைவன் சில இடங்களில் நபியையே எச்சரிக்கை செய்திருக்கிறான். உதாரணத்திற்கு நபியே குர்ஆனை இயற்றிருந்தால் இது மாதிரியான எச்சரிக்கை அவசியமில்லாத ஒன்றாகிவிடுமே! பலரின் உள்ளங்களில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாம் குர்ஆனை இயற்றியுள்ளார்கள் என்ற என்னமிருந்தால் அதை அடியோடு அழித்துவிட கீழே உள்ள குர்ஆன் வசனம் ஏதுவாக அமையும்.

இறைவனே தனது அருள்மறையில் பின்வருமாறு கூறுகிறான்.


இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலிள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை. (10:37)


(நபியே!) "சாட்சியத்தில் மிகவும் பெரியது எது?" எனக் கேளும்; "அல்லாஹ்வே எனக்கும் உங்களுக்குமிடையே சாட்சியாக இருக்கின்றான்; இந்த குர்ஆன் எனக்கு வஹீயாக அருளப்பட்டுள்ளது. இதைக் கொண்டு உங்களையும், (இதை அடைந்தவர்களையும் நான் அச்சமூட்டி எச்சரிப்பதற்காக நிச்சயமாக வணக்கத்திற்குரிய வேறு தெய்வங்களும் அல்லாஹ்வுடன் இருப்பதாக நீங்கள் சாட்சி கூறமுடியுமா? (என்று அவரிடம் கேட்பீராக) "இல்லை! நான் (அவ்வாறு) சாட்சி சொல்ல முடியாது என்றும் கூறுவீராக வணக்கத்திற்குரியவன் நிச்சயமாக அவன் ஒருவன் தான்; அவனுக்கு நீங்கள் இணைவைப்பதிலிருந்து நான் நிச்சயமாக விலகிக் கொண்டவனே" என்று கூறிவிடும். (6:19)

குர்ஆனில் எந்த ஒரு இடத்திலேயும் முன்னுக்கு முரனாக திரித்து கூறவில்லை, அது எப்பொழுது அருளப்பெற்றதோ! அன்றுமுதல் இன்றுவரை மாறுதலுக்கு உட்படாமல் அப்படியே நிலைத்திருப்பதை வைத்தே குர்ஆன் இறைவேதம் தான் என்பது புலனாகிறது. குர்ஆன் எந்த ஒரு முரன்பாடுக்கும் உட்படவில்லை என்பதை இறைவனே திருமறையில் விளக்கி கூறி இருக்கிறான்.


அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:82)

நாம் எதை முன்னிருத்தி குர்ஆனில் தேடினாலும் அதற்கு ஏற்ற பதிலை நமக்கு தரக்கூடிய ஒரு பொக்கிஷமாக இறைமறை விளங்குகிறது. எந்த ஒரு காலத்திற்கும் ஏற்ற வகையில் இதில் புதைந்திருக்கும் தகவல்கள் ஏராளம், அதை அனுபவிக்கும் மனமிருந்தால் குர்ஆன் தகவல்களை வெளிபடுத்தும் தாராளம்.

குர்ஆன் எல்லாவற்றிலோடும் ஒத்து போகக்கூடிய ஒன்றாகும். 1400 வருடங்களுக்கு முன்னரே குர்ஆன் பல அறிவியல் உன்மைகளை இவ்வுலகிற்கு இலை மறைக்காய் போல எடுத்து கூறியிருக்கின்றது. அப்பொழுதே அது கூறியதை, விஞ்ஞானிகள் இப்பொழுதுதான் கண்டுபிடித்துவிட்டு என்னவோ புதிதாக கண்டுபிடித்த மாதிரி மார்தட்டிக்கொள்கிறார்கள். உதாரணத்திற்கு ...........

சமீப காலத்தில் விஞ்ஞானிகள் இரு கடல்களுக்கும் மத்தியில் தடுப்பு சுவர் இருப்பதாகவும், ஒரு கடல் நீர் மற்ற நீருடன் கலக்கவில்லை என்றும், ஒரு கடலின் நீர் இனிப்பாகவும், மற்றென்றின் நீன் உப்பாகவும் உள்ளது என்று கண்டுபிடித்துள்ளார்கள். ஆனால் இறைவனோ அருள் மறையாம் திருகுர்ஆனில் 1400 வருடங்களுக்கு முன்னரே இச்செய்தியை விளக்கியுள்ளான்.

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்.; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். (25:53)

இது போல பல அறிய கருத்துக்களை குர்ஆன் தன்னுள் தாங்கியிருக்கிறது. அதுமட்டுமல்லாது உலகம் அழியும் வரை நடக்கும் பல அறிய செய்திகளை முன்கூட்டியே முன்னறிவிப்பாக குர்ஆன் கூறியிருக்கிறது. இறைவன் அருளால் நம் உயிருக்கு அவகாசம் இருந்தால் அப்படிப்பட்ட அரிய செயல்களை கான நம்மால் முடியும்.

எவர் ஒருவர் (முஸ்லீமாக இருந்தாலும் சரி அல்லது முஸ்லீம் அல்லாதவராக இருந்தாலும் சரி) முழு மனதுடனும், ஓர்மையுடனும் குர்ஆனை அனுகினால் அவர்களுக்கு குர்ஆன் நல்வழியைக்காட்டி சிறப்பான வழியில் வாழ்வை செலுத்த வழிவகை செய்கிறது என்பதில் சந்தேகமில்லை. கீழே உள்ள இறைவசனம் இவற்றை தெளிவுப்படுத்துகிறது.

இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (2:2)

Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email:

19 comments:

rajaraja solan m.a said... at November 29, 2010 at 6:38 PM

வணக்கம்
இறைவன் தூனிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான் என்று சொல்வார்கள். அது உண்மையா? இஸ்லாம் பார்வையில் இதற்கு என்ன பதில்?

sakthi said... at November 29, 2010 at 7:14 PM

Sir.,
muslim aangal nagai aniya thadai en?

sakthi said... at November 29, 2010 at 11:26 PM

வணக்கம் நான் சக்தி. ஒரு இஸ்லாமியர் இஸ்லாம் அல்லாத ஒரு பெண்ணை மணந்து கொள்ளளாமா?
அல்லது ஒரு இஸ்லாமிய பெண் இஸ்லாம் அல்லாத ஒரு ஆணை மணந்து கொள்ளளாமா?

ramesh said... at November 30, 2010 at 12:05 AM

வணக்கம் .எனது பெயர் ரமேஷ் மலாக்காவிருந்து....தங்களின் blog-ஐ படித்தேன். நீங்கள் சொல்வதெல்லாம் சரி...நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறேன். இஸ்லாத்தில் உள்ள சட்ட திட்டங்களை பின்ப்ற்றுகிறேன். ஐந்து வேளை தொழுகிறேன். நோன்பு நோற்கிறேன் மற்றும் அனைத்து திட்டங்களையும் பின்பற்றுகிறேன் என்று வைத்துக்கொள்வோம், ஆனால்..............
நான் ஏன் கலிமா சொல்லி ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவுவது போல் மதம் மாருகிறேன் என்ற பெயரில் பெயரை மாற்றுவது என்று இவ்வளவு செய்ய வேண்டும்? ஒரு இந்துவாக இருந்துகொண்டே நான் இஸ்லாத்தை பின்பற்றலாமே!

G u l a m said... at November 30, 2010 at 1:31 AM

நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!
//sakthi said...
Sir.,
muslim aangal nagai aniya thadai en?//
பொதுவாக இஸ்லாம் ஆண்கள் தங்கம் அணிவதை தடைச்செய்தாலும் தேவைக்கேற்ப அஃது தமது அழகை முன்னிருத்தியில்லாமல் தாராளமாக தங்கத்தை பயன்படுத்த அனுமதியளிக்கிறது, இதுதான் இஸ்லாம் தளத்தில் வெளியான இதுக்குறித்த விளக்கம் உங்களுக்கு பயனளிக்கும் என நினைக்கிறேன்
ஆண்களுக்கு தங்கம் ஹராம் என்று இறைத்தூதர் தடுத்தது உண்மைதான். எல்லா நிலைகளிலும் ஆண் ஆணாகவும் - பெண் பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்ற இயல்பை இஸ்லாம் விரும்புகின்றது. நடை - உடை - பாவனை - பேச்சு - செயல்பாடு என்ற அனைத்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும்.

பெண்ணை பெண் என்று எடுத்துக் காட்டும் உடைகளை ஆண்களோ, ஆண்களை அடையளாப்படுத்தும் உடைகளைப் பெண்களோ அணியக் கூடாது என்றும் இஸ்லாம் சொல்லியுள்ளது.

அதே போன்று தான் அணிகலன்களும். தங்கம் என்பது பொதுவாக, காலாகாலமாக, பெண்களுக்கான ஆபரணம் என்று வழக்கில் உள்ளது. தங்க நகை அணியும் போது ஒரு பெண் கூடுதல் அழகைப் பெறுகிறாள். அவளுக்கென்று, அவள் அழகை மேம்படுத்தும் ஆபரணமாக இருப்பதை ஆணும் தனக்காக்கிக் கொள்ளக் கூடாது என்ற கருத்து இதில் அடங்கி இருக்கலாம். ஆண் தங்கம் அணிவதால் அவன் அழகு மேம்படப் போவதில்லை. அது வெறும் 'பந்தா' தோரணையை மட்டுமே ஏற்படுத்தும்.

மைனர் சைன் என்று போட்டுக் கொள்ளும் சிலர் தங்கள் சட்டையின் சில பொத்தான்களை திறந்து விட்டுக் கொண்டு, தெருக்களில் பெண்களுக்கு முன்னால் உலவுவதைப் பார்க்கலாம். ஆண்கள் தங்கம் அணிவது இத்தகைய செயல்களுக்கு மட்டுமே வழிவகுக்கும்.

தேவைக்கு ஆண்கள் தங்கம் அணிவதை இஸ்லாம் தடுக்கவில்லை. உடைந்துப் போன, அல்லது பிடுங்கி எடுத்த பற்களுக்கு பதிலாக இன்றைக்கு நவீன சிகிட்சை முறை பிரபல்யமாகி புதிய செயற்கைப் பற்கள் வந்து விட்டன. ஒரு காலத்தில் பற்களுக்கு தங்கத்தைப் பயன்படுத்தி வந்தனர். அத்தகைய தேவைக்கா ஆண் தங்கத்தைப் பயன்படுத்தினால் தடையில்லை. நவீன அறுவை சிகிட்சையில் இன்றைக்கு பொருத்தப்படும் உடல் உறுப்புகள் போன்ற வளர்ச்சியில்லாத காலத்தில் போரில் மூக்கு வெட்டப்பட்ட ஒருவர் தங்கத்தால் மூக்கை வடிவமைத்துக் கொண்டார் அதை இறைத்தூதர் அனுமதித்தார்கள்.

சிறிய அளவிளான இத்தகைய தங்கங்களை தேவைக்கேற்ப ஆண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தங்கம் - பட்டு - வெள்ளிப் போன்றவை பெண்கள் பிரத்யேகமாக பயன்படுத்துபவையாகும். அதில் ஆண்கள் போட்டிப் போடக் கூடாது என்பதால் அவை ஆண்களுக்கு தடுக்கப்பட்டிருக்கலாம். ஆரம்ப வரிகளைப் படியுங்கள். "ஆண் ஆணாகவும், பெண் பெண்ணாகவும் (எல்லா நிலைகளிலும்) இருக்க வேண்டும் என்று இஸ்லாம் விரும்புவதைப் புரிந்துக் கொண்டால் இந்தத் தடைக்காண அர்த்தம் புரிந்து விடும்.

Haja said... at December 1, 2010 at 5:12 AM

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் ரமேஷ் உங்களுக்கும் உங்கள் குடுப்பத்தார்களுக்கும் இறைவன் நற்கூலியை அளிப்பானாக!
\\ இஸ்லாத்தில் உள்ள சட்ட திட்டங்களை பின்ப்ற்றுகிறேன். ஐந்து வேளை தொழுகிறேன். நோன்பு நோற்கிறேன் மற்றும் அனைத்து திட்டங்களையும்//
ஒரு மனிதன் தான் எந்த ஒரு மதத்தையும் சார்ந்தவராக கூட இருக்கலாம். அவர் முஸ்லீமாக மாறி தான் அனைத்து நற்செயல்களையும் செய்யவேண்டும் என்று இஸ்லாம் வழியுருத்தவில்லை. குர்ஆனில் எந்த ஒரு இடத்திலேயும் மனிதன் முஸ்லீமாக மாறினால் தான் சொர்க்கம், நரகம் என்று சொல்லப்படவில்லை. நீங்கள் செய்யும் நற்செயலுக்கு ஏற்ப இறைவனிடத்தில் கூலிகள் கண்டிப்பாக உண்டு என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இலலை.
நீங்கள் முதலில் இறைவன் ஒருவன் தான் என்று ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்த ஒரு சூழ்நிலையிலேயும் அவனுக்கு இனையாக யாதொன்றையும் கொண்டுவரக்கூடாது. அவனுக்கு கீழ்படிந்து அவனையும், அவனுடைய இறுதித் தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

\\ நான் ஏன் கலிமா சொல்லி ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவுவது போல் மதம் மாருகிறேன்//
நீங்கள் கலிமா என்பதை தவறுதலாக புரிந்துக்கொண்டுள்ளீர்கள், கலிமா என்பது நான் மேலே குறிப்பிட்டுள்ளதைப்போல் இறைவன் ஒருவன் என்று ஏற்றுக்கொள்வது தான். நீங்கள் அவ்வாறு உறுதிமொழி எடுத்துக்கொண்டாலே போதுமானது. அப்படி ஏற்றுக்கொண்டு கூட நல்அமல்கள் செய்யலாம்.

\\ பெயரில் பெயரை மாற்றுவது என்று இவ்வளவு செய்ய வேண்டும்? //
இஸ்ஸலாத்தில் பெயர் ஒரு பொருட்டே அல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தடைசெய்த பெயர்களைத்தவிர மற்றும் மார்க்கத்திற்கு புறம்பான பெயர்களையும் வைக்கக்கூடாது. மற்றும் மாற்றுமத பெயர்களை வைத்துக்கொண்டு நீங்கள் இஸ்லாம் வழியுருத்திய செயல்களை செய்யும் பொழுது உங்கள் நன்பர் உங்களுடைய அப்பெயரைக்கொண்டு அழைத்தால் அது ஒரு விகாரமான சொல்லாகத் தென்படலாம். ஆகையால் தான் பெயர்களை மாற்றவேண்டும் என சொல்கிறார்கள்.

இப்பொழுது தமிழில் குர்ஆனும், மார்க்க விரிவுரை புத்தகங்களும் கிடைக்கின்றன வாங்கி படித்து அதன்படி நடந்து இறைவனின் அருளை மென்மேலும் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும் எனப்து என்னுடைய வேண்டுகோலாக உங்களிடத்தில் வைக்கிறேன். வாழ்க்கையில் வெற்றியடைந்து மறுமையிலும் வெற்றியடைய இறைவனிடம் நம் அனைவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறேன்.

Haja said... at December 1, 2010 at 5:20 AM

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக.
\\ வணக்கம் நான் சக்தி. ஒரு இஸ்லாமியர் இஸ்லாம் அல்லாத ஒரு பெண்ணை மணந்து கொள்ளளாமா? //
சகோதரர் சக்தி இறைவன் திருமறையாம் குர்ஆனில் தெளிவாக கூறுகிறான் ஒரு முஸ்லீம் ஆண், முஸ்லீம் பெண்ணை தான் திருமணம் செய்துக்கொள்ளவேண்டும். அதே போல் ஒரு முஸ்லீம் பெண், முஸ்லீம் ஆணை தான் திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என வழியுறுத்துகிறது.
(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (2:221)

பொதுவாக ஒரு மதத்தை சார்ந்த ஆணோ அல்லது பெண்ணோ மாற்றுமதத்தவரை திருமணம் செய்யும் பொழுது, திருமணம் முடிந்த பிறகு தன்னுடைய கடவுள் தான் உயர்ந்தவர் நீ அக்கடவுளைதான் வணங்க வேண்டும் என்று கணவனும், அதைப்போல் மனைவியும் வாதாட நேரிடும். இதனால் வாழ்க்கையில் நிம்மதி இழந்து, மண கசப்புடன் வாழ்க்கையை தள்ளவேண்டிய சூழல் ஏற்ப்பட்டுவிடும். இப்படி எல்லாம் நடக்கும் என்று முன்கூட்டியே இஸ்லாம் மார்க்கம் தெளிவான விளக்கத்தை தந்துள்ளது. அதன்படி நடந்தால் வாழ்க்கையில் நிம்மதியோடு வாழலாம். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு வாழ்க்கையில் உங்களுக்கு தகுந்த மனைவியை தந்து இவ்வுலகில் நல்வாழ்க்கை வாழ அருள் புரிவானாக! மேலும் இறைவனுக்கு கீழ்படிந்து, நற்செயல்கள் புரிந்து மறுமையிலும் நல்வாழ்க்கை பெறவேண்டும் என உங்களுக்காக பிரார்த்திக்கிறேன்.

Haja said... at December 1, 2010 at 6:01 AM

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
\\ இறைவன் தூனிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான் என்று சொல்வார்கள். அது உண்மையா? இஸ்லாம் பார்வையில் இதற்கு என்ன பதில்? //

சகோதரர் ராஜராஜ சோழன் முதலில் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக!
நீங்கள் கூறுவது போல் மாற்று மதங்களில் சொல்லப்பட்டிருக்கலாம், ஆனால் இஸ்லாம் மதத்தில் அது போன்ற எந்த ஒரு செய்தியும் குறிப்பிடப்படவில்லை. இஸ்லாமியர் அனைவரும் இறைமறையாம் குர்ஆனையும், மனித இனத்தின் தலைவரான முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையையும் பின்பற்றி நடப்பவர்கள். குர்ஆனில் இறைவனைப் பற்றி சுமார் 3000 இடத்தில் குறிப்பிடுகிறான், அதில் எந்த ஒரு இடத்திலேயும் நீங்கள் கூறுவதுப் போல் (தூனிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான்) என்று இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களும் இதுப்போன்ற எந்த ஒரு செய்தியையும் குறிப்பிடபடவில்லை. ஆகையால் இஸ்லாம் பார்வையில் இது ஒரு தவறான சிந்தனையாகக் கருதப்படுகிறது.

Haja said... at December 1, 2010 at 6:15 AM

இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக.
\\ sakthi said...
Sir.,
muslim aangal nagai aniya thadai en? //
நீங்கள் கேட்ட கேள்விக்கு சகோதரர் அளித்த பதில் போதுமானதாக இருக்கும் என அல்லாஹ்வின் உதவியால் நம்புகிறேன். அதனால் தான் இஸ்லாம் மார்க்கம் நகைகளை ஆண்களுக்கு தடைச் செய்திருக்கிறது.

rajaraja solan m.a said... at December 3, 2010 at 11:53 PM

வணக்கம் நான் தான் ராஜ ராஜசோழன் ma. நீங்கள் கொடுத்த விளக்கம் எனக்கு போதுமானதாக ( ஏற்றுக்கொள்ள கூடியதாக) இல்லை. நான் படித்தில்
இறைவன் தூணிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான் என்றால் இறைவன் தூண் என்ற பெரிய ஒரு பொருளிலும் துரும்பு என்ற ஒரு சிறிய பொருளிலும் இருப்பான் என்று அர்த்தம் அல்ல.. தூண் போன்ற பெரிய பொருளிலிருந்து துரும்பு போன்ற சிறிய பொருள் வரை அனைத்து பொருளிலும் பரவியிருக்கிறான் என்று தெரிகிறது. இது உண்மை தானே......
அவன் இல்லாத இடம் ஒன்று உங்களால் சொல்ல முடியுமா?
// குர்ஆனில் (தூனிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான்) என்று இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களும் இதுப்போன்ற எந்த ஒரு செய்தியையும் குறிப்பிடபடவில்லை. // என்று நீங்கள் கூறுகிறிர்கள். அப்படியானால் ஒரு நல்ல விஷயத்தை மற்றொரு மதத்தில் சொன்னால் நீங்கள் எடுத்துக்கொள்ள மாட்டீர்களா?

sakthi said... at December 4, 2010 at 2:33 AM

வணக்கம் நான் தான் சக்தி. தாங்கள் என்ன பதில் தந்துள்ளீர்கள். எனக்கு புரியவில்லை. நாங்கு பக்கத்திற்கு டைப் செய்துள்ளீர்கள். சொல்ல வந்ததை தெளிவாகவும் சுருக்கமாகவும் அதே நேரத்தில் உரியும்படியும் கூறினால் வாதாட முடியும். மொத்ததில் நீங்கள் நகை ஆண்கள் நகை அணிவது ஆடம்பரம் என்று சொல்கிறீர்கள். அப்படி என்றால் புதிதாக ஒயிட் கோல்ட் என்று வந்துள்ளது. இது பார்ப்பதற்கு சாதாரண வெள்ளியைப்போல் உள்ளது. ஆனால் விலை தங்ககத்தின் விலை. இதை வாங்கி அணிந்து கொண்டால் பார்ப்பவற்களுக்கு வெள்ளி அணிந்துள்ளது போல் தெரியும். அப்படியானால் இதை அணிந்து கொள்ளலாமா ?
இதற்கு உங்கள் சட்டம் என்ன சொல்கிறது?

MOHAMED SHEIK said... at December 4, 2010 at 10:01 PM

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
மொஹம்மது சேக்.
ஹாஜா அவர்களே, எத்திவைக்கும் நமது கடமையை மிக சரியாக செய்து கொண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்....
ஆனால் இது போன்று நாத்திகம் பேசும் சிலருக்கு நாம் என்ன பதில் கூறினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குரானிலே கூறப்பட்டுள்ளது போல் "உங்களுக்கு உங்கள் மார்க்கம் எனக்கு என்னுடைய மார்க்கம்" என்று கூறி விடுங்கள்.

sakthi1 said... at December 4, 2010 at 10:23 PM

sakthi, said
இப்படி நீங்கள் கூறினால் நாங்களும் இப்படி கூறலாமே
"உங்களுக்கு உங்கள் மார்க்கம் எனக்கு என்னுடைய மார்க்கம்" என்று..
ஆனால் நாங்கள் கூறினால் நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள்.

ganesh said... at December 29, 2010 at 9:29 PM

வணக்கம், குரான் இறுதி வேதம் தானா? முஹம்மது நபி அதை உருவாக்கி இறுக்காலாமே. அவருக்கு எழுத படிக்க தெரியாது என்கிறிர்கள். சரி. அவர் குரானை புத்தமாக எழுதவில்லையே. அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக சொல்லியிருக்கிறார். இது அவர் ஆழ்ந்து சிந்தித்து சரி என்று பட்டவுடன் சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது. அதனால் தான் அதில் குறை ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பது என் கருத்து.

zalha said... at February 25, 2011 at 9:26 AM

அனைவர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
சகோதரி சக்தி மிகச் சரியாக சொன்னீர்கள்!!! அதனை நீங்களே ஏற்காவிடினும் நாங்கள் ஏற்கிறோம். ஏனெனில் 1400 ஆண்டுகளுக்கு முந்தியே அருளப்பட்ட குர் ஆனில் இதை அல்லாஹ் தெளிவாக குறிப்பிட்டுவிட்டான்.
''(நபியே)கூறுவீராக! நிராகரிப்போரே! நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்க மாட்டேன். நான் வணங்குபவனை நீங்கள் வணங்குபவர்களல்லர். மேலும் நீங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவனலன். மேலும் நான் வணங்குபவனை நீங்கள் வண்ங்குபவர்களல்லர். உங்களுக்கு உங்களது மார்க்கம், எனக்கு எனது மார்க்கம். (அத்தியாயம் ;109 வசனம்;1-6)

சகோதரி யார் இஸ்லாமிய மார்க்கத்தை நிராகரித்தாலும் இது அவருக்கு பொருந்தும்.
ஆனால் தாங்கள் கோபப்பட வேண்டாம். சகோதரர் சேக் சொல்லியிருக்க வேண்டியது வேறொரு குர் ஆனிய வசனம்.. அதி வீண் தர்க்கம் செய்பவர்களை கண்டால் 'உங்களுக்கு ஸலாம்! அறிவீனர்களை நாங்கள் விரும்பமாட்டோம்' என்று கூறி அவ்விடத்தை விட்டு விலகிச் செல்லுமாறு அல்லாஹ் தன்னை வழிப்பட்டோருக்கு ஏவுகின்ற வசனமாகும்.

zalha said... at February 25, 2011 at 10:27 AM

அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
சகோதரர் ரமேஷ்!
//நான் ஏன் கலிமா சொல்லி ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவுவது போல் மதம் மாருகிறேன் என்ற பெயரில் பெயரை என்று இவ்வளவு செய்ய வேண்டும்? ஒரு இந்துவாக இருந்துகொண்டே நான் இஸ்லாத்தை பின்பற்றலாமே//
தாங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது இந்துவாகவோ அல்லது வேறு இஸ்லாமல்லாத எந்த நம்பிக்கையிலோ இருக்கும் ஒருவரால் இஸ்லாத்தை பின்பற்ற முடியாது. ஏனெனில் இஸ்லாம் உள்ளத்தை மையப்படுத்துகின்ற மார்க்கம். இஸ்லாத்தின் அடிப்படை வேரே வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறெவரும் இல்லை என்று நம்புவதாகும். அதை மொழிவதையே கலிமா சொல்லுவது என்கிறோம்.. எனவே ஏக இறைவன் என்ற நம்பிக்கையும் அவனுக்கு இணையாக ஏதேனுமொன்றை கருதுவதும் தண்டவாளத்தின் பாதை போல. ஆனால் அல்லாஹ் தன் திருமறையில் தனக்கு இணை கற்பிக்கின்ற செயல் பாவங்களிலே தலையானது என்றும், அதனை ஒருபோதும் தான் மன்னிக்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளான். தன்னால் படைக்கப்பட்டவர்கள் தனது தனித்துவத்தை மறுப்பதை அவன் சகித்துக்கொள்ள வேண்டும் என்பது நியாயமில்லை. அந்த நியதியும் அவனுக்கில்லை.

zalha said... at February 25, 2011 at 10:51 AM

அனைவர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
சகோதரர் ராஜ சோழன்!
//அவன் இல்லாத இடம் ஒன்று உங்களால் சொல்ல முடியுமா?//
// குர்ஆனில் (தூனிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான்) என்று இல்லை. முஹம்மது நபி (ஸல்) அவர்களும் இதுப்போன்ற எந்த ஒரு செய்தியையும் குறிப்பிடபடவில்லை. // என்று நீங்கள் கூறுகிறிர்கள். அப்படியானால் ஒரு நல்ல விஷயத்தை மற்றொரு மதத்தில் சொன்னால் நீங்கள் எடுத்துக்கொள்ள மாட்டீர்களா?//
தாங்கள் நல்ல விஷயம் என்று கருதுவது எதை கொண்டு? ??
இஸ்லாமிய நம்பிக்கை பிரகாரம் அல்லாஹ் வானங்கள், பூமி ஆகியவற்றை படைத்து விட்டு அனைத்திலும் உயர்ந்தவனாய் அர்ஷ் என்ற சிம்மாசனத்தில் இருக்கிறான்..
நீங்கள் கூறுகிற படி எல்லா இடத்திலும் இருப்பான் என கொண்டால் பூமியில் இருக்கும் அருவருப்பான, வெறுக்கத்தக்க, இழிவான காரியங்கள் நடக்கின்ற இடங்களிலும் இருப்பான் என்றும் அர்த்தம் வரும்.. ஆனால் அவன் மிகத்தூயவன். அவன் தன் அறிவாலும், ஆற்றலாலும் எல்லா இடங்களையும் சூழ்ந்தவனாக இருக்கிறான்.
//ஒரு நல்ல விஷயத்தை மற்றொரு மதத்தில் சொன்னால் நீங்கள் எடுத்துக்கொள்ள மாட்டீர்களா?// சகோதரரே எல்லா நல்ல விடயங்களையும் இஸ்லாம் கற்றுத் தந்துவிட்டது..அது அல்லாஹ் வகுத்த (மதமல்ல) மார்க்கம்..இன்னொரு மதத்திலிருந்து நல்ல விடயங்களை சேர்க்கவோ, இஸ்லாத்தின் யாதொரு விடயத்தையும் தீயதென விலக்கவோ அல்லாஹ்வின் தூதருக்கு கூட உரிமையில்லை.

BindhuMaryam said... at February 25, 2011 at 12:00 PM

அனைவர் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!
சகோதரர் கணேஷ்!
தாங்கள் இப்பதிவை மீண்டும் விளங்கும் உள்ளத்தோடு படித்தால் உங்களுக்கு விடை கிடைக்கும்…போத வில்லை எனில் http://tamilislam.com/alquran/Holy_Quran_An_Introduction.htm

http://tamilislam.com/TAMIL/SCIENCE/truth_intro.htm (இது ஒரு புத்தகம். next என்பதை அடிக்கும் போது பக்கங்கள் புறட்டப்படும்)
ஆகிய தளங்களிலும் படித்து பாருங்கள்

kalil ahamed said... at April 24, 2017 at 10:15 AM

Rajaraja solan m.a bro - இறைவன் நாம் உள்ளத்தில் என்ன எண்ணுகிறோம் என்பதைக் கூட அறிய ஆற்றல் உடையவன்..இஸ்லாத்தை பொறுத்தவரையில் இறைவன் எல்லா இடத்திலாம் இல்லை...இறைவன் தனது ஏழு வானங்களுக்கும் மேலுள்ள அர்ஷுக்கும் (சிம்மாசனத்துக்கும்) மேலே இருக்கிறான். படைப்புகளை விட்டு தனித்து இருக்கிறான்.அவனுடைய படைப்புகள் அவனை விட்டு தனியாக உள்ளன.

الرَّحْمَٰنُ عَلَى الْعَرْشِ اسْتَوَىٰ ﴿20:5﴾
20:5. அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.

Post a Comment

சகோதரனைப் பற்றி

ஊக்கமளிப்பவர்கள்