குர்ஆன் & நபிமொழி

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம். (17:10)
Saturday, December 18, 2010
க்ஃப்க்ஃப்க...
Sunday, November 21, 2010

பிரார்த்தனை

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) நம் அனைவருக்கும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!நாம் வாழும் இவ்வுலகில் போட்டி, பொறாமை, நல்லென்னம் இல்லாமை போன்ற காரணங்களால் மனிதன் பல வழிகளில் சபிப்பிற்கு உள்ளாகி வாழ்க்கையை துறந்து விடுகிறான். பிறகு அவனால் எந்த ஒரு செயலையும் சிறப்பாக செய்யமுடியவில்லை. வாழ்க்கை என்னவோ இருண்டு விட்டதாக என்னி முடங்கி விடுகிறான். ஆனால் இதிலிருந்து மீள வழித் தெரியாமல் இருக்கிறான். பிரார்த்தனை (துஆ) செய்தால் நம் வாழ்க்கையை திரும்ப பெற்றுவிடலாம் எனப்தை இக்கட்டுரையின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.எல்லாம் வல்ல இறைவன் யாருடைய பிரார்த்தனையையும் நிராகரிப்பது இல்லை. யார் இறைவனிடத்தில் இரு கைகளையும் ஏந்தி பிரார்த்தனை செய்கிறார்களோ! அவர்களை...
Saturday, November 13, 2010

குர்ஆன் இறைவேதமா?

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் (இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (47:24)உலகில் பல மதங்களும், பலவகையான வேதங்களும் இருக்கின்றன, ஆனால் எந்த ஒரு வேதமும் காலப் போக்கில் மாற்றங்களை சந்தித்திருக்கின்றன. ஆனால் அருள்மறையாம் திருகுர்ஆன் இறைவனால் இறக்கிய நாளில் இருந்து இன்று வரை துளி அளவு கூட மாற்றமில்லாமல், எப்படி அது அருளப்பெற்றதோ! அப்படியே இன்று வரை மட்டுமல்லாது இறுதி நாள் (கியாமத் நாள்) வரை அவை எந்த ஒரு மாறுதலுக்கும் உள்ளாகாமல் அப்படியே இருக்கும் என்பதில் துளி அளவு கூட சந்தேகமில்லை. ஏனென்றால் குர்ஆன் இறைவேதம் என்ற சிறப்பை பெற்றிருப்பதனால்.குர்ஆன் இறைவேதம் தான் என்பதற்கு இறைவனே...
Wednesday, November 3, 2010

ஏகத்துவம்

இறை நம்பிக்கை:உலகில் பல நபர்கள் இறைவனை பல வடிவங்களாக வடித்து வைத்துள்ளனர் மண்ணுலகத்துகு ஒரு கடவுள், விண்ணுலகத்துகு ஒரு கடவுள், கல்வி, செல்வம், ஆக்க, அழிக்க, காக்க என்று கண்ணில் படகூடியதையெல்லாம் கடவுள் என வழிபடுகிறார்கள்.சிலர் கடவுளே கிடையாது எல்லாம் இயற்கையின் மூலம் தற்செயலாகவே நடக்கின்றன என்கிறாரகள்.இறைவனா? அவன் ஒருவன் தான், அவன் எத்தேவையும் அற்றவன், அவன் யாரையும் பெறவும் இல்லை, யாராலும் பெறப்படவும் இல்லை. அவனுக்கு நிகராக இவ்வுலகிலும், மறுவுலகிலும் எதுவும் இல்லை என்கிறது ஒரு பிரிவு.கடவுள் இருக்கிறானா? இல்லையா? முதலில் இதை தெளிவுப்படுத்துவோம். இவ்வுலகிற்கு ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரத்துகும் மேற்பட்ட இறைத்தூதர்கள் வந்துள்ளதாக வரலாறு கூறுகின்றன....
Friday, October 15, 2010

கஃபா (முதல் இறையில்லம்) வரலாறு கற்போம்

அகில உலகங்களையும் படைத்த அல்லாஹ், தான் ஒருவன் மட்டும் தான் கடவுள் என்பதற்கு, அவற்றை அத்தாட்சிகளாகவும் ஆக்கினான். இவை இன்றளவும் அல்லாஹ் மட்டும் தான் ஒரே கடவுள் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றன. அப்படிப் பட்ட அத்தாட்சிகளில் உள்ளவை தான் அவனுடைய புனிதமிக்க ஆலயமாகிய கஅபாவும் அது அமைந்துள்ள மக்கமா நகரமும் ஆகும். உலக முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டுமிடமாகவும், உலக முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டைப் பறைசாற்றக் கூடியதாகவும் இவ்வத்தாட்சிகள் அமைந்துள்ளன. 'கஅபா' ஆலயத்திற்கும், மக்கமா நகரத்திற்கும் மற்ற ஆலயங்களை விடவும், நகரங்களை விடவும் தனித்த சிறப்புகளும், சட்டங்களும் உள்ளன. அப்படிப்பட்ட சிறப்புகளில் சிலவற்றைக் காண்போம். உலக முஸ்லிம்களின் ஒரே கிப்லாகஅபா' ஆலயம்...
Sunday, September 5, 2010

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்

குர்ஆன் என்பதின் விளக்கம்:அகில உலகத்தையும் படைத்து பரிபாளித்து கொண்டிருக்கும் இறைவனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு நபிமார்கள் மூலமாக ஒவ்வொரு வேதங்கள் அருளப்பட்டன, ஆனால் அந்த சமுகத்தினர் அதை சரிவர பயன்படுத்தாமல் அதை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் விட்டுவிட்டார்கள். மேலும் அது காலப் போக்கில் அழிந்தும் விட்டன. இறுதியாக, இறுதி நபியான கன்மனி நாயகம் ரஸூல் (ஸல்) அவர்கள் மூலம் முஸ்லிம் மட்டுமல்லாது அனைத்து மத மக்களுக்கும் ஏற்ற முறையில் ஒரு வேதத்தை இறக்கிய்ருளினான் அதுவே இறுதி வேதமான அல்குர்ஆன் ஆகும். இது இறுதி நாள்வரை எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், எப்படி அருளப்பட்டதோ! அதன் உள்ளடக்கம் சிறிதும் மாற்றமில்லாமல் பாதுகாக்கப்படும் என இறைவன் தன் திருமறையிலேயே!...
Friday, August 20, 2010

இறையச்சம்

எல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்றால் இறை பக்தி இறையச்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றது.உலகில் பல மாதிரியான தவறுகள் நடந்தவன்னம் தான் இருக்கின்றது, அதை தடுப்பதற்கு பல சட்டங்கள் இருந்தும் அவற்றால் சரிவர செயல் பட முடியவில்லை என்பதே தெரிகிறது. இன்று உலகில் நடக்கின்ற எத்தனையோ கொடுமைகள் நிகழக் காரணம் என்ன? பலரிடம் இறையச்சம் இல்லாமையே காரணமாக இருக்கின்றது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பாலியல் பலாத்காரங்கள், ஈவ்டீசிங், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, திருட்டு, விபச்சாரம், லஞ்சம், மனித உமை மீறல்கள் இது போன்ற குற்றங்களைத் தடுக்க வகைவகையான சட்டங்கள்...
Saturday, August 14, 2010

மரணம் முதல் மறுமை வரை

மரணம்: உயிர்ப் பெற்ற ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தை அடைந்தே தீர வேண்டும் என்பது உலக நியதி. ஒரு மனிதன் ஜனித்த நாள் முதல் ஒரு குறிபிட்ட நாள் வரைதான் அவனால் இப்பூமியில் உயிர் வாழ முடியும், அதன் பிறகு மரணமடைந்தே ஆக வேண்டும். அருள்மறை திருகுர்ஆன் இவ்வாறு கூறுகிறது.ஒவ்வொர் ஆத்மாவும் மரணத்தைச் சகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்கள் (செய்கைக)ளுக்குறிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (3:185)மரணம் வரும் வேலையில்...
Wednesday, August 4, 2010

ஆதம் (அலை) வரலாறு

வரலாறு முன்னுரை:நபி ஆதம் (அலை) அவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட ஆதி மனிதர், முதல் நபி, மானிடவர்க்கத்தின் மூலப்பிதா என சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை களிமண்ணிலிருந்துப் படைத்தான். அவனின் பிரதிநிதியாக பூலோகத்திற்கு அனுப்பியும் வைத்தான். அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களுக்கு தன்னால் படைக்கப்பட்ட பொருட்களின் பெயர்களை அவனே கற்றுக்கொடுத்தான். பின் அப்பெயர்களை மலக்குமார்களுக்கு விவரிக்குமாறு பணித்தான். பிறகு தன்னால் படைக்கப்பெற்ற மலக்குமார்கள் போன்றோர்களை நபி ஆதம் (அலை) அவர்களுக்கு சிறம் பணிய அல்லாஹ் கட்டளையிட்டான். இப்லீஸ் தவிர மற்ற ஏனையவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க சிறம் பணிந்தார்கள். இப்லீஸ் நெருப்பால்...
Saturday, July 31, 2010

ஹஜ் புனிதப் பயணம்

Normal 0 false false false MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Times New Roman"; mso-ansi-language:#0400; mso-fareast-language:#0400; mso-bidi-language:#0400;} Normal 0 false false false MicrosoftInternetExplorer4...
Página 1 de 41234Próxima

சகோதரனைப் பற்றி

ஊக்கமளிப்பவர்கள்